Wednesday 22 February 2012

பாரதி மீண்டும் பிறந்து வந்தால்???


என்ன செய்வார்? 

சமீபத்தில் படிக்க நேர்ந்த  ஒரு செய்தி ...
http://www.firstpost.com/living/the-kolkata-rape-case-she-was-just-asking-for-it-215689.html  - படியுங்கள்

இரு குழந்தைகளுக்கு தாயான 37 வயது பெண் ஒருவர் கொல்கட்டாவில் கடத்தி (?) கற்பழிக்கபட்டிருக்கிறாள்.
பாவம், அவர் வேறே சிங்கள் மதர் ! அதாவது கணவனை விட்டு பிரிந்தவர்.  மன நிம்மதியை நாடி ஒரு நைட் கிளப்பில் கொஞ்சம் சரக்கு ஏத்திக்கொண்டு  நாடு நிசி 1-மணிக்கு ரோடு-ல போகிற ஒரு கார்ல லிப்ட் கேட்டாங்க. அந்த கார்ல இருந்த படுபாவி பசங்க அந்த பெண் வயசுல பாதி வயசு  தான்  இருக்கிறவங்க அவரை rape பண்ணிட்டாங்க.
இந்த கொடுமையை விட போலீஸ் காரனுங்க கொடுமை இன்னும் அந்நியாயம்.  ஓடுற கார்ல் எப்புடி பண்ணினாணுக என்றெல்லாம் கேள்விகளால் படுத்துராங்க. பாவம் அந்த பெண்!

சுதந்திர இந்திய நாட்டில் ஒரு பெண் நடு ராத்திரி வரைக்கும் நைட் கிளப்லே இருக்கிற உரிமை இல்லாதவலகதான் இருக்கிறாள்.
அதுவும் கணவனுடன் இல்லாத ஒரு பெண் தனிமையில் அமைதியை நாடி தான் கிளுப்க்கு போனாங்க.
இரண்டு பிள்ளைகள் வேறே பாவம்.
பிள்ளை வயது பசங்கதநேன்னு லிப்ட் கேட்டா நாசமா போனவங்க இப்புடி பண்ணிட்டாங்களே.
பட்ட கொடுமையை விட போலீஸ் கொடுமை இன்னும் torture ஆக இருக்கிறதே.

இதுலவேறே அந்த செய்தி படிதவனுகளெல்லாம் அந்த பெண்ணுக்குத்தான் புத்தி இல்லைங்கிற மாதிரிதான் எழுதறாங்க.  ஆணாதிக்கம்!

இன்னம் இந்த விஷயம் பென்னுரிமைக்கரர்களின் காதுகளுக்கு எட்டவில்லையோ!
வழக்கம் போலே  -  5   வயது சிருமியைக்கொடதன் பலாத்காரம் செய்கிறார்களே, அவள் குடித்தாலா இல்லை கூப்பிட்டாளஎ என்று விதண்டாவாதம் செய்து இந்த பெண்ணுக்கு நியாயம் (?) தேடி தர முன்வரவில்லையே ஏன்?

கல்லூரி பெண்கள் அரகொரை ஆடை அணிவது அவர்களின் சுதந்திரம் - பசங்க அவங்களை பார்க்கலாம், தொட்டு பார்க்க ஆசை படக்கூடாது.
ரோட்ல எவ்வளோ வேணாலும் உடம்பு காட்டிகிட்டு போகலாம் - வேணும்னா ரசிச்சுக்கோங்க கமெண்ட் பண்ணாதீங்க!
தண்ணி அடிக்கிறது society ல இன்றைய trend - தப்பே இல்லை.

வாழ்க இந்திய! வாழ்க பாரதி!  வாழ்க காந்திஜி!

Monday 6 February 2012

Parents' Support to Children in Charcter Building

அண்மையில் airtel சூப்பர் சிங்கர் நிகைழ்சியில் பார்க்க நேர்ந்த இரு சம்பவங்கள்...

1  முகுந்த் எனும் ஒரு சிறுவன் -ரொம்ப அழகாக பாடும், விகில் வூதும் திறமையும்  உள்ளவன்.
கர்நாடிக இசையில் நல்ல வல்லவனாகவும், திரை பாடல்கள் பாடுவதில் ரசனை உள்ளவனகவும் தான் இருந்தான்.  
சரி, போட்டி எனும்போது வெற்றி தோல்விகள் சகஜம் தானே.  இது போன்ற நிகழ்சிகளில் பொதுவாக சிறுவர்களல்ல, பெரியவர்களே கூட அழுது ஆர்பாட்டம் பண்ணுவது, அவர்களை ஜட்ஜ்-களும், தொகுப்பாளர்களும், சக- போட்டியாளர்களும் கண்ணீர் விட்டு சீன் போடுவதும் - எல்லாம் நமக்கே பழகி போயாச்சி.   அனால், இந்த முகுந்த்-க்கு பாவம், அன்னிக்கி ரொம்ப சளியால் தொல்லையாக இருந்ததால் அவனால் சரியாக பாட முடியவில்லை.  மேற்கூறிய அனைவரும் வருத்தத்தால் பீலிங்க்ஸ் கொட்டும் பொது, (அன்று அந்த பையனின் அப்பா/அம்மா வரவில்லை) அவனின் தாத்தாவிடம் கருது கேட்டார்கள் தொகுப்பாளினி.   

அவர் சொன்னாரே பாருங்க - இவனுக்கு எப்பவுமே விளையாட்டுதான். சரி வர சாதகம் செய்யாமல் எல்லாருடனும் பேசிக்கொண்டே இருந்தான்.. நீங்களே பர்தேர்களே... என பாவம் அந்த குழந்தை!

ஒரு போட்டியில் - அதுவும் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எளிமினடே ஆவது அப்படி ஒரு குற்றமல்லவே?  சின்ன பையன், நிறைய கடுர்க்கொல்வதற்கும், திறமையை வளர்த்துக்கொண்டு வெளிபடுதுவதற்கும் எவ்வளவோ வயசும், வாய்ப்பும் வுண்டு.  அந்த பெரியவருக்கு இது புரியவில்லைய, இல்லை, இசை குடும்பத்துக்கு அவமானத்தை தேடிதந்தான்-ன்னு வெறுப்போ தெரியவில்லை.
  பெரியவர்களுக்கும், இங்கிதம் என்பது கொஞ்சம் ரொம்பவே தேவை என நினைக்கவைத்து அந்த காட்சி.

௨.  அதே ப்ரோக்ராம் - வேறொரு பையன் - விக்னேஷ்.  இவனும் கர்நாடிக இசை பயிலுபவன் தான்.  அவன் அம்மா அவனுடன் வந்திருந்தாள்.  இவனும் போன வாரம் எளிமினடே செய்யபப்பட்டான்.  
ஆனால், அவனும் அவனின் அம்மாவும் வெளிபடுத்திய நிதானமும், நம்பிக்கையும் தான் இதை எழுத என்னை தூண்டின.  அம்மா கூறினாள் - அவனின் முயற்சியால் தான் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருக்கிறான்.  பரவாயில்லை, அவனுக்கு நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பும், வயசும் இருக்கு, அடுத்த சீசன்-க்கு நல்ல prepare பண்ணிக்கொண்டு வருவான் - என்றாளே, எனக்க்கு முகுந்த் ஞாபகம் வந்ததன் காரணம் அவனின் திறமையா, அன்றைய உடல் நிலை சரியில்லை என்றாலும் அவனையே பழிட்ட அவன் தாதாவா,  அல்லது விக்னேஷின் அம்மாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளா....

தெரியல!


Saturday 7 January 2012

Kolaveri

வை  திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி டி...

நம்ம மக்களுக்கு மேற்கத்திய இசையில் நிறையவே நாட்டம் இருக்கிறது. 
 இந்த விமர்சகர்-னி இருக்கிறாங்க பாருங்க - இவங்களுக்கு ஜனங்களுக்கு எதாவது பிடிச்சிதோ அதை கேலி பண்ணியே அகனும்க.  

எவ்வளவு அழகான ஆங்கில பாடல் பாருங்க.  அதுவும் காதல் தந்த ஏமாற்றத்தில் பாடும் தத்துவ பாடல்.

 பசங்க மட்டுமல்ல அவர்களின் அம்மாக்களும், அப்பாக்களும் கூட ரசிக்கிரன்களே இப்பாடலை.
 ஆயுட்காலம் கம்மிதான், இருந்தாலும் படம் வெளியாகும் வரை நம்மை பாடவைக்கும் பாடல் தான்.

அதுவும் ரஜினி மகள் இயக்க, மருமகன் கமல் பொன்னுடன் இணைந்து நடிக்க, சேர்ந்து பாட, ஆட  -   அட சும்மவாங்க?


 
 

Thaakkam...

அண்மையில் தொலைகாட்சியில் பார்த்த இரண்டு நிகழிகள்...
   natgeo - இல் பார்த்தது -
1 
   ஆப்ரிக்கா வில் படமாக்கப்பட்ட ஒரு கட்சி...
 சிங்கங்கள் கூட்டமாக வாழும்.  ஒரு கூட்டத்திற்கு ஒரே ஒரு ஆண் சிங்கம் தான் தலைவனாக இருக்குமாம். அதாவது  தான் தவிர வேறே ஆண் சிங்கம் அந்த கூட்டத்தில் இருக்கக் கூடாது. அப்படி ஒரு சட்டமாம்!

 இந்நிகழ்ச்சியில் பெண் சிங்கங்கள் மட்டுமே இருக்கிற ஒரு கூட்டத்திற்குள் ஒரு ஆண் சிங்கம் நுழைய பார்க்கிறது. அதுகளில் ஒரு பெண் சிங்கம் ஒரு ஆண் குட்டியை வைத்திருக்கிறது. இந்த ஆண் சிங்கம் அந்த குட்டி சிங்கத்தை கொல்ல பார்க்கிறது. பெண் சிங்கம் படாத பாடு பட்டு அந்த குட்டியை வாயில் கவ்விக்கொண்டு ஒவ்வொரு இடமாக அலைந்து அந்த குட்டியை காப்பாற்றுகிறது.
மிருகங்களில் கூட இந்த ஆணாதிக்கம் -  ரொம்பவே பாவமாகவும், கஷ்டமாகவும் இருந்தது.

2 இது இந்தியாவில் படமாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.  மேற்கு தொடர் மலைகளில் ராஜனாகங்களுக்கு ஒரு சிப் மாதிரி பொருத்தறாங்க . 
மறுபடியும் ஒரு ஆண் ராஜநாகம் ஒரு பெண் ராஜநாகத்தை அணுகுகிறது. அந்த பெண் நாகம் already pregnant  அது தன் வயிற்றில் முட்டைகளை சுமந்துக்கொண்டிருக்கிறது. (அதற்கு காரணகர்த்தா வேறே ஆண் நாகம்.) ஆகையால் பெண் நாகம்  இந்த ஆண் நாகதிடமிருந்து விலகி போக முயற்சிக்கிறது. ஆண் நாகத்திற்கு கெட்ட கோவம் .  அந்த பெண் நாகத்தை கழுத்தில் கடித்து கொதறி சாகடிக்கிறது. பெண் நாகம் போராடி சாகிறது.

நிகழ்ச்சி தொகுப்பாளர் சொல்கிறார் - ஒரு ஆண் நாகம் பெண் நாகத்தை நாடி செல்கிறபோது அதை அடைய முடியலேன்னா சாகடிக்குமாம்.  இது சமயத்தில் ஆண் நாகத்தின் சாவில் கூட முடியலாம்.

ஆக மொத்தத்திலே மிருகங்களும் மனிதர்களை போன்றவைதான்!